ஆதி கேசவ பெருமாள் கோவிலின் அறங்காவலர் கோவில் நிலங்களை விற்றதாக வந்த புகாரின் மீது இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை

மயிலாப்பூர் சித்திர குளம் பகுதியில் உள்ள ஆதி கேசவ பெருமாள் கோவிலை தமிழக அரசின் இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை இரவு முதல் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளனர். இதுவரை இந்த கோவிலை தனியார் தொண்டு நிறுவனம் நிர்வகித்து வந்தது. நேற்று சனிக்கிழமை மாலை தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு கோவிலுக்கு வந்து கோவில் அர்ச்சகர்களிடம் அரசாணையை வழங்கி திங்கட்கிழமை முதல் கோவிலில் பூஜைகள் எவ்வாறு நடத்தப்படவேண்டும் என்று விவாதித்தார். மேலும் ஏற்கனெவே கோவிலை நிர்வகித்து வந்த அறங்காவலர் ஸ்ரீதர் மீது கோவில் நிலங்களை நடைமுறைக்கு மாறாக விற்பனை செய்ததாகவும் மேலும் சில புகார்கள் கடந்த ஆட்சி காலத்திலேயே வந்துள்ளதாகவும் அந்த புகார்கள் மீது கடந்த ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் தற்போது திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு அந்த புகார்கள் மீது தற்போது நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்தார். கோவில் அறங்காவலர் சம்பந்தமான புகார் மீது விசாரணை நடத்தி அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

Verified by ExactMetrics