ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் பங்குனி உத்திர பிரம்மோற்சவம் 2024 நிகழ்ச்சி அட்டவணை.

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் வருடாந்திர பங்குனி உத்திர பிரம்மோற்சவம் 2024 முக்கிய நிகழ்வுகளின் அட்டவணை.

15 மார்ச் – காலை : கிராம தேவதை பூஜை.
மாலை – மிருத்சங்கிரஹமம், அங்குரார்பணம்.
இரவு / ஸ்ரீ நர்த்தன விநாயகர் வெள்ளி மூஷிக வாகனம் மற்றும் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சிங்காரவேலர் சுவாமி மயில் வாகனம் வீதி உலா.

16 மார்ச் – காலை: துவஜாரோஹணம் (கோடியேற்றம்) சுவாமி வெள்ளி பவழகால் விமானம் பஞ்சமூர்த்தி வீதி புறப்பாடு.
இரவு / புன்னை மரம், கற்பக விருக்ஷம் மற்றும் வேங்கை மரம் வீதி உலா.

17 மார்ச் – காலை: வெள்ளி சூர்ய பிரபை வாகனம் வீதி உலா
இரவு – வெள்ளி சந்திர பிரபை வாகனம், கிளி வாகனம் மற்றும் ஹம்ச வாகனம் வீதி உலா.

மார்ச் 18 – காலை : வெள்ளி அதிகார நந்தி, கந்தர்வி மற்றும் கந்தர்வன் வாகன வீதி புறப்பாடு 107 வது ஆண்டு
இரவு – வெள்ளி பூத வாகனம், பூதகி மற்றும் தாரகாசூர வாகன வீதி உலா

19 மார்ச் – காலை – வெள்ளி புருஷா மிருக வாகனம், சிங்கம் மற்றும் புலி வாகன வீதி உலா
இரவு – நாக வாகனம், காமதேனு மற்றும் ஆடு வாகன வீதி உலா.

20 மார்ச் – காலை – சவுடல் விமானம் புறப்பாடு
நள்ளிரவு – வெள்ளி ரிஷப வாகனம், தங்க ரிஷப வாகனம் மற்றும் தங்க மயில் வாகனம் வீதி உலா.

21 மார்ச் – காலை – பல்லக்கு. இரவு – யானை வாகனம் வீதி புறப்பாடு

22 மார்ச் – காலை – தேர் ஊர்வலம்
இரவு – திரும்புகழ் மற்றும் பஞ்சமூர்த்தி ஏகாந்த சேவை

23 மார்ச் / காலை – திருஞானசம்பந்தர் அங்கம்பூம்பாவை உயிர்ப்பித்தல் விழா
மதியம் – அறுபத்துமூவர் விழா
இரவு – ஸ்ரீ சந்திரசேகரர் சுவாமி அஸ்வ வாகனம் பார்வேட்டை விழா
நள்ளிரவு – பஞ்சமூர்த்தி ஏகாந்த சேவை

மார்ச் 24- காலை – பஞ்சமூர்த்தி வெள்ளி கேடயம் வீதி புறப்பாடு
மாலை – பிக்ஷாடனர் வீதி புறப்பாடு
நள்ளிரவு – பஞ்சமூர்த்தி வீதி புறப்பாடு

மார்ச் 25 – திருக்கூத்தபிரான் (சின்ன நடராஜா) புறப்பாடு மற்றும் நடராஜ தீர்த்தவாரி
பஞ்சமூர்த்தி தீர்த்தவாரி புறப்பாடு
மாலை – திருகல்யாண மஹோத்சவம் தொடர்ந்து கைலாய வாகனம் வீதி புறப்பாடு.
நள்ளிரவு – துவஜாவரோஹணம் (கொடியிறக்கம்)
சண்டிகேஸ்வரர் உலா

மார்ச் 26 – பந்தம் பரி விழா

மார்ச் 27 முதல் ஏப்ரல் 5 வரை / விடையாற்றி விழா – கச்சேரிகள்

One thought on “ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் பங்குனி உத்திர பிரம்மோற்சவம் 2024 நிகழ்ச்சி அட்டவணை.

Comments are closed.

Verified by ExactMetrics