ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் புத்தாண்டு தரிசனத்துக்கு சிறப்பு ஏற்பாடுகள்

புத்தாண்டு தினத்தன்று ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் தரிசனத்தை முன்னிட்டு கூடுதல் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. கூட்ட நெரிசல் ஏற்படும் என்பதால், கூடுதல் வரிசையை அதிகாரிகள் அமைத்துள்ளனர்.

அன்றைய தரிசன நேரங்கள் மற்ற நாட்களைப் போலவே இருக்கும். அதே வேளையில் சிறப்பு நுழைவு வாயில் வழியாக சென்று சாமி தரிசனம் செய்ய ரூ. 50 மற்றும் ரூ. 100 க்கு தரிசன டிக்கெட்டுகள் வாங்க வேண்டும். உடல் ஊனமுற்றோருக்காக சிறப்பு வரிசையும் அமைக்கப்படும்.

அன்றைய தினம், வழக்கமாக நடைபெறும் அர்ச்சனைகள் நடைபெறாது என கோவில் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

செய்தி: எஸ்.பிரபு

Verified by ExactMetrics