நகர்ப்புற சுகாதார மையங்களில் உள்ள ஊழியர்கள் ஜனவரி மாத தொடக்கத்தில் தடுப்பூசி செலுத்தும் திட்ட வழிமுறைகளுக்காக காத்திருக்கிறார்கள்.

மயிலாப்பூர் மண்டலம் முழுவதிலும் உள்ள பெருநகர சென்னை மாநகராட்சியின் நகர்ப்புற சுகாதார மையங்களில் உள்ள ஊழியர்கள் 2022 ஆம் ஆண்டு தடுப்பூசி போடுவதற்கான வழிமுறைகளுக்காக காத்திருக்கிறார்கள்.

சிறு வயதினருக்கு தடுப்பூசி போட அரசு ஆயத்தமாகி வரும் அதே நேரத்தில் இதற்கு முன்பு இரண்டு தடுப்பூசிகள் செலுத்திக்கொண்ட மூத்தவர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களான சுகாதார ஊழியர்களுக்கு ‘பூஸ்டர்’ டோஸ் தடுப்பூசி வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

ஆழ்வார்பேட்டை சி.பி.ராமசாமி சாலையில் உள்ள நகர்ப்புற சுகாதார மையத்தில், தினமும் காலையில் செவிலியர்கள் பிசியாக உள்ளதாகவும், ஒவ்வொரு நாளும் குறைந்தது 50/60 பேர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வருகிறார்கள் என்றும் அவர்கள் கூறுகிறார்கள். காலை 9 மணி முதல் 11 மணி வரை இந்த இடம் பரபரப்பாக இருக்கும்.

புதன்கிழமை, நாங்கள் ஆழ்வார்பேட்டை மையத்திற்கு காலை 11.30 மணியளவில் சென்றபோது, ​​தடுப்பூசி செலுத்திக்கொள்ள 8 பேர் அமர்ந்திருந்தனர். தடுப்பூசியின் இரண்டு பிராண்டுகளும் இங்கு கிடைக்கிறது. ஐந்து பேர் கொண்ட ஒரு செட் இங்கே கூடிய பிறகே மருந்து பாட்டிலை திறப்பதால், மருந்து வீணாவது தவிர்க்கப்படுகிறது என்று இங்குள்ள ஊழியர்கள் தெரிவித்தனர்.

கோப்பு புகைப்படம்
Verified by ExactMetrics