கபாலீஸ்வரர் கோவில் சன்னதிக்குள் பொதுமக்கள் செல்ல அனுமதி

கபாலீஸ்வரர் கோவிலில் இன்று செவ்வாய்க்கிழமை முதல் பொதுமக்கள் கோவில் சன்னதிக்குள் அனுமதிக்கப்படவுள்ளதாக கோவிலில் பணியாற்றும் மூத்த அர்ச்சகர்கள் தெரிவித்துள்ளனர். இது ஒரு சோதனை அடிப்படையிலேயே நடைபெறும் என்றும், இந்த நடைமுறை சிறப்பான முறையில் இருந்தால் தினமும் தொடரும் என்றும் தெரிவித்துள்ளனர். இது வரை பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் வாரத்தில் சில குறிப்பிட்ட நாட்கள் கோவில் வளாகத்திற்குள் மட்டுமே அனுமதித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.