பி.எஸ். பள்ளியில் இலவசமாக வழங்கப்பட்ட புத்தகபைகள் , காலணிகள் மற்றும் கணித உபகரணப் பெட்டி

மயிலாப்பூர் பி.எஸ். மேல்நிலைப்பள்ளியில் ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு நேற்று திங்கட்கிழமை தமிழக அரசின் சார்பில் , புத்தகபைகள் காலணிகள் மற்றும் கணித உபகரணங்கள் அடங்கிய பெட்டி போன்றவை வழங்கப்பட்டது. மேலும் திங்கட்கிழமை சுப்பிரமணிய பாரதியாரின் நூற்றாண்டு விழாவும் கொண்டாடப்பட்டது. இதில் கட்டுரைப்போட்டி, கவிதைப்போட்டி போன்றவை நடத்தப்பட்டது. சில மாணவர்கள் சேர்ந்து சுப்பிரமணிய பாரதியாரின் உருவ படத்தை பள்ளி வளாகத்தின் முகப்பில் வண்ண பவுடர்கள் மூலம் வரைந்திருந்தனர்.

Verified by ExactMetrics