கன்னியாஸ்திரிகளால் சாந்தோமில் நடத்தப்படும் ஹோம் நர்சிங் படிப்பு

சாந்தோம் அருகே செயின்ட் ரபேல்ஸ் பள்ளி உள்ளது. இந்த பள்ளியை கிறித்தவ மதத்தை சேர்ந்த பெண் சகோதரிகள் சேர்ந்து நடத்தி வருகின்றனர். இந்த பள்ளியில் இரண்டு சகோதரிகள் கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர். இதை கடந்த மார்ச் மாதத்திலிருந்து தொடங்கியுள்ளனர். இது தவிர மகளிரின் மேம்பாட்டுக்கும் திருநங்கைகளுக்கும் அவர்களின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வந்துள்ளனர்.

தற்போது ஆதரவில்லாமல் வாழ்ந்து வரும் மகளிர்க்கு மூன்று மாத ஹோம் நர்சிங் படிப்பை தொடங்கியுள்ளனர். இந்த ஹோம் நர்சிங் படிப்பு வீட்டிலுள்ள நோயால் பாதிக்கப்பட்டுள்ள முதியவர்களின் வசதிக்காக தொடங்கப்பட்டது. இரண்டு நன்கு பயிற்சி பெற்ற மூத்த நர்ஸ்களை வைத்து இந்த படிப்பை ரபேல்ஸ் பள்ளி வளாகத்தில் நடத்துகின்றனர். பயிற்சி முடிந்தவுடன் கொஞ்ச நாட்களுக்கு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் நர்சிங் பயிற்சி அளிக்கப்படும். இந்த பயிற்சி முடிந்தவுடன் அவர்களுக்கு பணி வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும் என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் இது போன்ற ஹோம் நர்ஸ் பணிக்கு தேவைகள் அதிகமாக இருப்பதாகவும் மாத சம்பளம் இருபதாயிரம் வரை பெற வாய்ப்பிருப்பதாகவும் சகோதரி பிலோ தெரிவிக்கிறார்.

Verified by ExactMetrics