மயிலாப்பூரின் வளர்ச்சி திட்டங்கள் பற்றி எம்.எல்.ஏ த.வேலு சட்டசபையில் பேச்சு

மயிலாப்பூர் எம்.எல்.ஏ த.வேலு கடந்த வாரம் தேர்தலுக்கு பிறகு முதன் முதலாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் பேசினார். கொரோனா சூழ்நிலை காரணமாக தற்போது சட்டமன்ற கூட்டத்தொடர் கலைவாணர் அரங்கில் நடைபெற்றுவருகிறது. வழக்கமாக செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் நடைபெறும். இந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் மயிலாப்பூர் எம்.எல்.ஏ மூன்று முக்கியமான விஷயங்கள் பற்றி பேசினார்.

முதலாவதாக மயிலாப்பூரிலுள்ள பழமையான குடிசை மாற்று பகுதிகளை எவ்வாறு புனரமைப்பது என்பது பற்றியும் இரண்டாவதாக மயிலாப்பூரில் அதிகப்படியான கோவில்கள் இருப்பதால் அந்த கோவில்களை எவ்வாறு பாதுகாத்து தூயமையாக வைத்திருப்பது மற்றும் மயிலாப்பூரில் மூன்று தலைமுறைகளாக நிறைய குடும்பங்கள் சில பகுதிகளில் வசித்து வருகின்றனர் என்றும் அவர்களுக்கு இன்னும் பட்டா வழங்கப்படவில்லை என்றும் எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து அவர்களுக்கு பட்டா வழங்கவேண்டும் என்றும் பேசினார். மேலும் சிட்டி சென்டர் அருகே உள்ள அம்பேத்கார் பாலம் பகுதியில் நிறைய ஏழை மக்கள் வசித்து வருகின்றனர் என்றும் இந்த பகுதியில் அரசுக்கு சொந்தமான நிலங்கள் நீங்கலாக தேவையான அளவு தனியாரிடம் நிலங்களை வாங்கி இங்கு வசிக்கும் மக்களுக்கு வீடுகள் கட்டித்தர வேண்டும் என்று அரசிடம் கோரிக்கை வைத்தார்.

 

Verified by ExactMetrics