பட்டினப்பாக்கம் கடற்கரையில் மக்கள் தங்கள் வீடுகளில் வைத்து வழிபட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு

பட்டினப்பாக்கம் கடற்கரையில்  இன்று மாலை நான்கு மணிமுதல் மக்கள் தங்கள் வீடுகளில் வைத்து வழிபட்ட விநாயகர் சிலைகளை தனித்தனியே கொண்டு வந்து கரைத்தனர். இதற்கு உள்ளூர் மக்கள் உதவி புரிந்தனர். சிலைகளை சிலர் நடந்தும் சிலர் தங்கள் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் கொண்டு வந்தும் கரைத்தனர். இந்த வருடம் பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட அனுமதியளிக்காததால் பெரிய சிலைகள் ஏதும் ஊர்வலமாக கடற்கரைக்கு எடுத்துவரப்படவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.