ஸ்ரீ கேசவப் பெருமாள் கோவிலில், பழைய நிர்வாக குழுவினரின் வழக்கமான நடவடிக்கைகள் தொடர்கிறது.

கடந்த ஆண்டு ஆகஸ்டில், திடீர் நடவடிக்கையாக இந்து சமய அறநிலையத்துறையானது ஸ்ரீ ஆதி கேசவப் பெருமாள் கோயிலின் நிர்வாகத்தை நீண்டகால அறங்காவலர்களிடமிருந்து கைப்பற்றியது.

மேலும் கடந்த சில மாதங்களாக கோவில் அலுவலக கதவு பூட்டியே கிடக்கிறது.

கோவில் அறங்காவலர் தலைவர் என்.சி.ஸ்ரீதர், கடந்த இரண்டு தலைமுறைகளாக கோவிலுக்காக தனது பணியை முழு நேரமாக செலவிட்டதாகவும், எனவே இந்து சமய அறநிலையத்துறையின் நடவடிக்கையை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்போவதாக மயிலாப்பூர் டைம்ஸிடம் ஆகஸ்ட் மாதத்தில் தெரிவித்திருந்தார்.

தற்போது அவர் கோவிலில் ஏற்கனெவே வகித்த பதவியை மீண்டும் கையில் எடுத்து வழக்கமான நடைமுறையை செய்து வருகிறார்.

சமீபத்தில் நடந்த தெப்பத் திருவிழாவை ஏற்பாடு செய்ததும் இவரே.

சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்றம் தனது இடைநீக்கத்தை ரத்து செய்ததை அவர் மயிலாப்பூர் டைம்ஸிடம் உறுதிப்படுத்தினார். நான்கு அறங்காவலர்களின் இடைநீக்கம் தொடர்பான வழக்கில் இடைக்காலத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

அலுவலகத்தின் சாவியை திரும்ப ஒப்படைக்குமாறு இந்து சமய அறநிலையத்துறைக்கு கடிதம் எழுதியுள்ளோம், விரைவில் அது மீண்டும் திறக்கப்படும். முன்பு போலவே, கோவிலில் அனைத்து திருவிழாக்கள் உட்பட அன்றாட நடவடிக்கைகள் அனைத்தையும் நாங்கள் நிர்வகிக்க உள்ளோம் என்று ஸ்ரீதர் கூறினார்.

இங்கு பயன்படுத்தப்பட்டுள்ள புகைப்படம் கோவிலில் நடைபெற்ற கருட சேவையின் போது எடுக்கப்பட்ட புகைப்படம்.

 

செய்தி : எஸ்.பிரபு

Verified by ExactMetrics