ஸ்ரீ வேதாந்த தேசிகர் தேவஸ்தானத்தில் ஜூலை 9ல் சுதர்சன ஹோமம்.

மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ வேதாந்த தேசிகர் தேவஸ்தானத்தில் ஆண்டுதோறும் மக்கள் நலன் வேண்டி சுதர்சன ஹோமம் நடைபெற்று வரும் நிலையில், இந்த ஆண்டு ஜூலை 9-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை சுதர்சன ஹோமம் நடைபெற உள்ளது.

இந்நிகழ்ச்சியில் ஸ்ரீரங்கம் ரங்கநாதசாமி கோயில், காஞ்சிபுரம் வரதராஜ சுவாமி கோயில், திருவெள்ளூர் ஸ்ரீ வீரராகவ ஸ்வாமி கோயில் அர்ச்சகர்களும் பங்கேற்கின்றனர் என்று கோயில் அறங்காவலர் ஆர்.முகுந்தன் தெரிவித்தார்.

Verified by ExactMetrics