புத்தாண்டை முன்னிட்டு ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலில் நிலையான பக்தர்கள் கூட்டம்.

இன்று காலை புத்தாண்டை முன்னிட்டு ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலில் நிலையான பக்தர்கள் கூட்டம் சாமி தரிசனத்திற்காக வந்துகொண்டிருந்தது. நிறைய மக்கள் பொது வரிசையிலும் சிலர் சிறப்பு தரிசன வரிசையிலும் (நூறு ரூபாய் கட்டணம் செலுத்தி) சாமி தரிசனத்திற்காக சென்றனர். கோவிலில் தன்னார்வலர்கள் வரிசையில் வருபவர்களை முகக்கவசம் அணிய சொல்லி அறிவுறுத்தினர். ஆனால் பக்தர்கள் சமூக இடைவெளியை பின்பற்றவில்லை. கோவிலின் சார்பாக பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் தன்னார்வர்களின் மூலம் வழங்கப்பட்டது. கபாலீஸ்வரர் கோவில் தவிர மற்ற கோவில்களிலும் சாமி தரிசனிதற்காக பக்தர்கள் வந்திருந்தனர்.

Verified by ExactMetrics