புதுவருடத்திற்கு முதல் நாள் இரவு வெறிச்சோடிய மெரினா

நேற்று டிசம்பர் 31ம் தேதி இரவு மெரினா கடற்கரை சாலை போலீசாரின் கட்டுப்பாடுகளால் வெறிச்சோடிக்கணப்பட்டது. எப்போதும் மெரினா கடற்கரை சாலையில் புத்தாண்டிற்கு முதல் நாள் இரவு காந்தி சிலை அருகே உள்ள டவர் கடிகாரம் அருகே மக்கள் கூட்டமாக கூடி ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்வர். ஆனால் இந்த வருடம் மக்கள் மெரினாவிற்கு வர அரசு தடைவிதித்துள்ளதால் மக்கள் கடற்கரைக்கு வரவில்லை. ஆனாலும் டவர் கடிகாரம் வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மேலும் நேற்று இரவு சில அய்யப்ப பக்தர்கள் ராஜா அண்ணாமலைபுரத்திலுள்ள அய்யப்பன் கோவிலுக்கு நடைபயணமாக நடந்து சென்றனர்.

Verified by ExactMetrics