இன்று இரவு நேரங்களில் மெரினாவிற்கு வரவேண்டாம் என்று பொதுமக்களுக்கு போலீசார் வேண்டுகோள்.

புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு டிசம்பர் 31ம் தேதி இரவு வழக்கமாக மெரினாவில் மக்கள் கூட்டம் கூடுவார்கள். கொரோனா தொற்று பரவல் காரணமாக இந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. மேலும் டிசம்பர் 31ம் தேதி இரவு மெரினா சாலைகளில் தடுப்புகள் ஆங்காங்கே போடப்பட்டு கண்காணிக்க இருப்பதாகவும் அதே நேரத்தில் வாகனங்களில் வேகமாக இயக்கி சாகசம் செய்வோர் மீதும் விதிகளை மீறி செயல்படுவோர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. எனவே பொதுமக்கள் யாரும் மெரினாவிற்கு வரவேண்டாம் என்று போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Verified by ExactMetrics