ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் ஸ்டெல்லா மேரிஸ் ஊடகவியல் துறை மாணவர்கள்

ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியின் மூன்று மாணவர்கள், அவர்களின் வருடாந்திர ப்ரொஜெக்ட்டின் ஒரு பகுதியாக வெள்ளிக்கிழமை காலை ஸ்ரீ கபாலீஸ்வரர் ஆலயத்திற்கு வந்திருந்தனர்.

இவர்கள் இரண்டாம் ஆண்டு விஷுவல் கம்யூனிகேஷன் மாணவிகளான லிண்டா, தேஜஸ்வினி மற்றும் ஷிவானி. கோயில்களுக்குள் ‘ஒளியும் நிழலும்’ என்ற கருப்பொருளை அடிப்படையாக கொண்ட அவர்களின் ப்ரொஜெக்டுக்காக வந்திருந்தனர்.

சுவாரசியமான கான்ட்ராஸ்ட் நிறங்களைத் தேடுகிறோம் என்று தேஜஸ்வினி கூறினார்.

கோவிலுக்குள் அதிக எண்ணிக்கையிலான பூனைகள் இருப்பது சுவாரஸ்யமான போட்டோ ஷூட்டை உருவாக்கியது என்று லிண்டா கூறினார்.

இந்த பணியின் ஒரு பகுதியாக சனிக்கிழமை மாலைக்குள் மூன்று கோயில் சார்ந்த புகைப்படங்களை தீம் அடிப்படையில் சமர்ப்பிக்க வேண்டும்.

செய்தி: எஸ்.பிரபு

Verified by ExactMetrics