மயிலாப்பூரில் திங்கட்கிழமை முதல் வழிபாட்டுத்தலங்கள் திறக்கப்பட்டது.

திங்கட்கிழமை முதல் ஊரடங்கில் மேலும் தளர்வுகள் அரசு அறிவித்தது. அந்த வகையில் கோவில், தேவாலயங்கள் மற்றும் மசூதிகளை திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. கோவில்களுக்கு உள்ளே சென்று தற்போது வழிபாடுகள் நடத்தலாம். நேற்று மழை பெய்த போதிலும் கபாலீஸ்வரர் கோவிலுக்கு வழக்கமாக வரும் பக்தர்கள் வந்திருந்தனர். ஆனால் சன்னதிக்குள் மக்களை அனுமதிக்கவில்லை. அர்ச்சனைக்கும் அனுமதியில்லை. அதே போல் லஸ் அருகே உள்ள மாதா தேவாலயமும் திறக்கப்பட்டது. மக்கள் தேவாலயத்திற்குள் வந்து பிரார்த்தனை செய்து சென்றனர்.

                                                                                              ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவில்

லஸ் தேவாலயம்