தெப்போற்சவ விழாவில் பணியாற்றுவது உடற்பயிற்சி செய்வது போன்று உள்ளது: காவல் ஆய்வாளர்

எம்.ரவி, காவல் ஆய்வாளர், மயிலாப்பூர். தனது உடற்தகுதியைப் பற்றி குறிப்பிடும் இவர், உடற்பயிற்சிகாக்க தினசரி கடுமையான அட்டவணையைக் பின்பற்றுகிறார். ஆதி கேசவப் பெருமாள் கோயிலில் தெப்போற்சவ விழா துவங்கியதும், அங்குள்ள இரண்டு மணி நேர வேலைகளை உடற்பயிற்சிகாக்க பயன்படுத்த முடிவு செய்தார்.

தினமும் மாலையில், நடைபெற்றுவரும் ஆதிகேசவப் பெருமாள் கோவிலின் தெப்பத்திருவிழாவின் போது சுவாமிகள் குளத்தில் தெப்பத்தில் உலா வரும்போது, இவர் சித்திரகுளத்தின் நான்கு குளக்கரை வீதிகளை இரவு 7 மணி முதல் 9 மணி வரை வலம் வருகிறார்.

இந்த வாரம் தனது நடைப்பயணம் இரட்டை நோக்கத்திற்கு உதவுகிறது என்றும், இரண்டு மணிநேரம் ஒரே இடத்தில் நிற்பதற்குப் பதிலாக, நான்கு தெருக்களைச் சுற்றி நடப்பது எனது தினசரி உடற்பயிற்சிக்கு உதவுகிறது. மேலும், தெப்பத்தின் போது ‘பந்தோபஸ்த்’ ஒழுங்காக இருப்பதையும் உறுதி செய்கிறேன்” என்கிறார் காவல் ஆய்வாளர் ரவி.

ஒவ்வொரு தெருவிலும் பாதுகாப்பு பணிக்காக சிறிய அளவில் காவலர்கள் நியமிக்கப்பட்டனர். மேலும் இன்ஸ்பெக்டர் ரவி குளத்தை சுற்றி வந்ததால், அந்தந்த பகுதிகளில் நியமிக்கப்பட்ட காவலர்கள் தங்களது பணியை சிறப்பாக செய்தனர்.

செய்தி மற்றும் புகைப்படம்: எஸ்.பிரபு

Verified by ExactMetrics