மயிலாப்பூர் டைம்ஸ் அறக்கட்டளை ஆர்.ஏ.புரம் பள்ளிக் குழந்தைகளுக்கு புதிய சீருடைகள் வாங்க நிதியுதவி

ஆர்.ஏ.புரத்தில் உள்ள மாதா சர்ச் சாலையில் அமைந்துள்ள செயின்ட் லாசரஸ் நடுநிலைப் பள்ளியில் படிக்கும் ஒரு பகுதி மாணவர்களுக்கு பிப்ரவரி 1 அன்று பள்ளி திறக்கப்பட்டவுடன் புதிய பள்ளி சீருடைகள் வழங்கப்பட்டன.

மயிலாப்பூர் டைம்ஸ் அறக்கட்டளையின் நன்கொடையின் மூலம் இது ஓரளவு சாத்தியமானது. இந்த நன்கொடை புதிய கல்வியாண்டு தொடங்கும் போது வழங்கப்படும் வருடாந்திர நன்கொடையாகும், ஆனால் இந்த ஆண்டு கொரோனா சூழ்நிலையின் காரணமாக சீருடை தைத்து மாணவர்களுக்கு வழங்குவது தாமதமானது.

இந்த பள்ளியில் படிக்கும் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்கு சீருடை வழங்கப்படுகிறது.

மயிலாப்பூர் டைம்ஸ் அறக்கட்டளைக்கு நிதியுதவி மயிலாப்பூர் டைம்ஸிடமிருந்தும் மற்றும் மயிலாப்பூர்வாசிகளிடமிருந்தும் பெறப்படுகின்றது. இந்தப் பள்ளிக்கு உதவிகள் செய்வது தவிர்த்து, இதர மயிலாப்பூர் பள்ளிகளில் படிப்பில் சிறந்து விளங்கும் 20 ஏழை மாணவர்களுக்கு அவர்களின் உயர்கல்வி படிப்புக்கு ஆண்டுதோறும் ரூ.2 லட்சம் மதிப்பிலான உதவித்தொகைகளை வழங்கி வருகிறது.

கடந்த 2021ம் ஆண்டிற்கான உதவித்தொகை, கடந்த ஆண்டு ஆகஸ்ட்/செப்டம்பரில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.

நீங்கள் மயிலாப்பூர் டைம்ஸ் அறக்கட்டளைக்கு நிதியுதவி அளிக்க விரும்பினால் ஆன்லைன் வழியாக அளிக்கலாம். நீங்கள் அளிக்கும் நன்கொடைகளுக்கு வரி விளக்கு உண்டு. மேலும் விவரங்களுக்கு மயிலாப்பூர் டைம்ஸ் சாந்தியை 044 -24982244 தொலைபேசி எண்ணை அழைக்கவும்.