தேனாம்பேட்டை மண்டலத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உயர்வு.

தேனாம்பேட்டை மண்டலத்தில் கொரோனா தொற்று தற்போது மூன்று சதவீதமாக உயர்ந்துள்ளது. மயிலாப்பூரின் பெரும்பாலான பகுதிகள் தேனாம்பேட்டை மண்டலத்தில் வருகிறது. தற்போது நகரில் மூன்று மண்டலங்களில் மூன்று சதவீதத்திற்கும் மேலாக கொரோனா பரவி வருவது கவலையளிப்பதாக உள்ளது. ஆனால் தெருக்களிலும், மார்க்கெட் பகுதிகளிலும், கோவில்களிலும், தேவாலயங்களிலும், இது போன்ற பல்வேறு பகுதிகளில் மக்கள் முகக்கவசம் அணியாமல் உள்ளனர். கொரோனா பரவும் சூழலில் மக்கள் இது போன்று பொறுப்பில்லாமல் இருப்பது மிகவும் கவலையளிக்கும் விதத்தில் உள்ளது.

Verified by ExactMetrics