இந்த பள்ளியின் மாணவர்கள் ஆசிரியர்களுடன் இணைந்து சமத்துவ பொங்கலை கொண்டாடினர்.

தைத்திருநாளாம் பொங்கல் தினத்தை முன்னிட்டு, மயிலாப்பூரில் உள்ள சர் சிவசாமி கலாலயா மேல்நிலைப் பள்ளியில், ஆசிரியர்கள் மாணவர்கள் என அனைவரும் ஒன்று கூடி வண்ண வண்ண கோலமிட்டு, பாரம்பரிய உடைகளை அணிந்து, பொங்கலோ பொங்கல் என கோஷமிட்டு பொங்கல் வைத்து சமத்துவ பொங்கல் பண்டிகையை கொண்டாடினர்.

மாணவர்கள் அனைவரும் ஆர்வத்தோடு முன் வந்து பொங்கல் வேலைகளை பகிர்ந்து செய்ததாக அங்குள்ள ஆசிரியர்கள் தெரிவித்தனர் .

பொங்கல் வைத்து முடித்த பின் இறை வழிபாடு பொங்கல் பாடல்கள் பாடி படைத்த பொங்கலை பகிர்ந்து உண்டு சந்தோஷமாக விழாவை நிறைவு செய்தனர்.

செய்தி: இலக்கியா பிரபு

Verified by ExactMetrics