கபாலீஸ்வரர் கோவிலில் பங்குனி தேரோட்டத்தை காண குவிந்த பக்தர்கள் கூட்டம்

இன்று காலை சுமார் 9 மணியளவில் கபாலீஸ்வரர் கோவிலின் பங்குனி தேரோட்டம் தொடங்கி சிறப்பாக நடைபெற்றது. தேர் திருவிழாவை ஆயிரக்கணக்கான பக்கதர்கள் மாட வீதிகளில் குவிந்திருந்தனர். பெரும்பாலான மக்கள் முகக்கவசங்கள் அணிந்திருந்தனர். போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்த வருடம் கொரோனா காரணமாக தெருக்களில் மக்களின் கற்பூர ஆரத்திக்காக தேரை நிறுத்த வேண்டாம் என்று போலீசாரும் அரசும் கோவில் நிர்வாகத்தினருக்கு அறிவுறுத்தியிருக்கின்றனர். தேர் மாட வீதியை சுற்றி வலம் வருவதற்கு சுமார் நான்கு மணி நேரம் தேவைப்படும்.

Verified by ExactMetrics