ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலில் நாளை பங்குனி தேரோட்டம்

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலில் பங்குனி பெருவிழா கடந்த சில நாட்களாக சிறப்பாக நடைபெற்று வருகிறது. நாளை காலை சுமார் 8.30 மணியளவில் தேர் ஊர்வலம் நடைபெறவுள்ளது. தேர் திருவிழாவிற்கான ஏற்பாடுகள் நேற்று முதலே கோவிலில் நடைபெற்று வருகிறது. தேர் ஊர்வலத்தின் போது எப்போதும் ஆங்காங்கே மக்களின் ஆரத்திக்காக தேர் நின்று செல்லும். ஆனால் இந்த வருடம் கொரோனா காரணமாக அது போல நிற்கவேண்டாம் என்று உள்ளூர் போலீசார்கோவில் நிர்வாகத்தினருக்கு அறிவுறுத்தியுள்ளனர். இதுநாள் வரை நடைபெற்ற முக்கிய நிகழ்ச்சிகளான அதிகாரநந்தி மற்றும் ரிஷபவாகனம் நிகழ்ச்சிகளுக்கு மக்கள் கூட்டம் அதிகளவில் வந்திருந்தது. எனவே நாளை நடைபெறும் தேர் ஊர்வலத்திற்கும் கூட்டம் அதிகமாக வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது கோவிலுக்கு வரும் பக்தர்கள் ஓரளவிற்கு முகக்கவசம் அணிந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Verified by ExactMetrics