தேர்தல் 2021: மயிலாப்பூரில் திமுக, அதிமுக வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு

மயிலாப்பூர் பகுதியில் தற்போது சுறுசுறுப்பாக திமுக வேட்பாளர் த.வேலுவும் மற்றும் அதிமுக வேட்பாளர் நடராஜும் தங்களுடைய தேர்தல் பிரச்சாரங்களை மும்முரமாக செய்து வருகின்றனர். இவர்கள் தினமும் காலையிலும் மாலையிலும் குடிசை மாற்று வாரிய பகுதிகள் மற்றும் மக்கள் அதிகம் வசிக்கும் குப்பம் பகுதிகள், காலனிகள் போன்ற இடங்களில் மக்களை சந்தித்து வாக்குகளை சேகரித்து வருகின்றனர். இவர்களுடைய பிரச்சாரங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.

Verified by ExactMetrics