தேர்தல் 2021: மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர் நடிகை ஸ்ரீப்ரியாவின் தேர்தல் பிரச்சாரம்

மயிலாப்பூர் தொகுதியில் நடிகர் கமலஹாசனின் மக்கள் நீதி மய்யத்தின் சார்பாக போட்டியிடுபவர் நடிகை ஸ்ரீப்ரியா. இவர் ராஜா அண்ணாமலைபுரத்தில் வசித்து வருகிறார். மக்கள் நீதி மய்யத்தின் மயிலாப்பூர் பகுதி தேர்தல் பிரச்சாரம் ஆங்காங்கே குறைந்த அளவில் நடைபெறுகிறது. மேலும் மக்கள் நீதி மய்யத்தின் சார்பாக மயிலாப்பூர் பகுதிக்கான திட்ட அறிக்கைகள் பற்றிய தகவல் ஏதும் இல்லை. இன்று காலை மந்தைவெளி செயின்ட். ஜான்ஸ் பள்ளி அருகே ஆட்டோ ரிக்ஷா மூலம் பிரச்சாரம் செய்ய திட்டமிட்டிருந்தனர். அதே நேரத்தில் நாளை கமலஹாசன் மயிலாப்பூர் பகுதியில் பிரச்சாரம் செய்யவுள்ளதாக அலுவலகத்தில் இருந்து தகவல் வரவே நாளையே ஸ்ரீபிரியாவின் பிரச்சாரமும் செய்ய திட்டமிட்டிருக்கின்றனர். மக்கள் நீதி மய்யத்தின் சார்பாக போட்டியிடும் வேட்பாளர் நடிகை ஸ்ரீப்ரியா மயிலாப்பூர் பகுதிக்கு சரியான பிரச்சார திட்டங்கள் மற்றும் அறிக்கைகள் ஏதும் தயாரிக்கவில்லை என்றே தோன்றுகிறது.

Verified by ExactMetrics