கொரோனா காரணமாக வேலையிழந்த வீட்டு வேலை செய்து வந்த இந்த பெண்கள் தற்போது வருமானத்திற்க்காக சாலையோரம் உணவு மற்றும் இட்லி மாவை விற்பனை செய்கின்றனர்.

இந்த கொரோனா நேரத்தில் வீட்டு வேலை செய்பவர்கள், சமையல் வேலை செய்பவர்கள், தச்சர், பெயிண்டர் போன்றோர் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். பட்டினப்பாக்கம் அருகே உள்ள சீனிவாசபுரம், டூமிங் குப்பம், நொச்சி நகர், நொச்சி குப்பம் போன்ற பகுதிகளில் வசித்து வரும் சுமார் முப்பது நபர்கள் ஆர்.ஏ.புரம் எம்.ஆர்.சி நகர் பகுதிகளில் மாத சம்பள அடிப்படையில் வீட்டு வேலைகளை செய்து வந்தனர். கொரோனா காரணமாக கடந்த ஐந்து மாதங்களாக வேலைக்கு செல்லவில்லை. இதனால் அவர்கள் வருமானம் இல்லாமல் இருந்து வருகின்றனர். ஆனால் சிலர் வருமானத்திற்க்காக புதிய சில முயற்சிகளை செய்து வருகின்றனர். ரேணுகா எம்.ஆர்.சி நகரில் வேலை பார்த்து வந்த ரேணுகா என்பவர் கடந்த இரண்டு மாதங்களாக வீட்டில் உள்ள ரேஷன் அரிசியை வைத்து வெளியில் இருந்து உளுத்தம் பருப்பை வாங்கி இட்லி மாவை தயார் செய்து மெரினா லூப் சாலையில் விற்பனை செய்து வருகிறார். இதன் மூலம் இவருக்கு சிறிய அளவிலான வருமானம் கிடைக்கும் என்று என்று கூறுகிறார்.

இதே போல் வேறொரு பகுதியில் வசித்து வரும் அம்பிகா என்பவர் கொரியன் ஒருவரது வீட்டில் வீட்டு வேலை செய்து வந்தார். இவர் இப்போது மாலை வேலையில் பிரிஞ்சி செய்து இங்குள்ள சாலையில் விற்பனை செய்து வருகிறார்.

இதுபோன்று இந்த பகுதியில் வசித்து வரும் பல நபர்கள் தங்களுடைய வருமானத்திற்க்காக புதிய முற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.