எம்.ஆர்.சி நகரில் இன்று தடுப்பூசி முகாம்

எம்.ஆர்.சி நகரில் உள்ள ராமநாதன் திருமண மண்டபத்தில் சென்னை மாநகராட்சி தடுப்பூசி முகாம் இன்று காலை பத்து மணி முதல் நடைபெற்றுவருகிறது. சமூக இடைவெளியை பின்பற்றி நாற்பத்தைந்து வயதிற்கு மேற்பட்டவர்களுக்கே வழங்கப்பட்டுவருகிறது. இங்கு நூறு டோஸ் கோவிஷீல்ட் தடுப்பூசி மட்டுமே உள்ளதாக தெரிவித்துள்ளனர். இதுபோன்ற தடுப்பூசி முகாம்கள் நகரில் பல்வேறு இடங்களில் நடைபெற்று வந்தாலும் மக்களுக்கு முன்னதாகவே இது பற்றிய தகவல் தெரிவிப்பதில்லை. பெரும்பாலான மக்கள் பதினெட்டு வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி எங்கு வழங்கப்படுகிறது என்று கேட்டு வருகின்றனர்.

Verified by ExactMetrics