மெரினா மணலில் சில இடங்களில் நசுங்கி கிடக்கும் ஆமைகள்.

மெரினா கடற்கரையோரத்தில் நடைப்பயிற்சி செய்யும் மக்கள் கடற்கரையோரத்தில் நிறைய ஆமைகளை பார்த்துள்ளதாகவும், சில இடங்களில் ஆமைகளின் முட்டைகள் மற்றும் குஞ்சுகள் நசுங்கி கிடைப்பதாவும் தெரிவித்துள்ளனர். மேலும் அது சம்பந்தமாக சில புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளனர்.

ஆமைகள் தற்போது கலோரத்தில் முட்டையிடும் பருவம். நூற்றுக்கணக்கான ஆமைகள் மெரினா கடற்கரை முதல் கிழக்கு கடற்கரை கானத்தூர் வரை இந்த பருவத்தில் வந்து முட்டையிடும். சில ஆமைகள் மீனவர்களின் வலைகளில் சிக்கி இறந்துவிடுகிறது. மேலும் ஆமைகள் கடற்கரையோரம் தெரு நாய்களால் வேட்டையாடப்படும் சூழ்நிலையும் உள்ளது. சில நேரம் கற்கரையோரம் வசிக்கும் மக்களால் எடுக்கப்பட்டு அங்கு விற்கப்படுகிறது.

இது போன்று ஆமை முட்டைகளுக்கு போதிய பாதுகாப்பு இல்லாததல், கடந்த சில வருடங்களாக தனியார் தொண்டு நிறுவனங்களும், வனத்துறையினரும் மற்றும் தன்னார்வலர்களும் சேர்ந்து மெரினா முதல் கிழக்கு கடற்கரை சாலை வரை உள்ள கடற்கரையோரம் ரோந்து பணியில் ஜனவரி பிப்ரவரி மாதங்களில் ஈடுபடுவர். பின்னர் அங்கிருந்து முட்டைகளை சேகரித்து ஒரே இடத்தில் வைத்து பாதுகாத்து பின்னர் கடலுக்குள் அனுப்புவர்.