மயிலாப்பூரில் மேலும் இரண்டு அம்மா கிளினிக்குகள் தொடக்கம்

கடந்த சில மாதங்களுக்கு முன் தமிழக முதல்வர் அம்மா கிளினிக்கை மயிலாப்பூரில் தொடங்கிவைத்தார். இங்கு சளி, இருமல், காய்ச்சல் மற்றும் தலைவலி மற்றும் சிறிய மருத்துவ பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிக்கப்படுகிறது. நோயாளிக்கு கடுமையான பிரச்சினை இருந்தால் அரசு மருத்துவமனைகளுக்கு சென்று பரிசோதனை செய்ய பரிந்துரை செய்யப்படுகிறது.

தற்போது இந்த அம்மா கிளினிக் மயிலாப்பூரில் மேலும் இரண்டு இடங்களில் தொடங்கப்பட்டுள்ளது. ஒன்று சாந்தோம் பகுதியில் நீல்கிரிஸ் ஸ்டோர் அருகிலும். மற்றொன்று ஆர்.ஏ. புரத்தில் காமராஜ் சாலையின் தெற்கு பகுதியிலும் தொடங்கப்பட்டுள்ளது.

சனிக்கிழமை தவிர வாரத்தின் அனைத்து நாட்களிலும் காலை 8 மணி முதல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் கிளினிக் திறந்திருக்கும். சிகிச்சை இங்கே இலவசமாக வழங்கப்படுகிறது.

Verified by ExactMetrics