எம்.ஜி.ஆர். ஜானகி மகளிர் கல்லூரியில் நடைபெற்று வரும் தடுப்பூசி முகாம். தடுப்பூசி போடுவதற்கு குறைந்த எண்ணிக்கையிலான மக்களே வந்துள்ளனர்.

சென்னை நகர் முழுவதும் வேவேறு இடங்களில் சென்னை மாநகராட்சியும் ரோட்டரி சங்கமும் இணைந்து பெரிய தடுப்பூசி முகாமை இன்று காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை நடத்தி வருகின்றனர். மயிலாப்பூர் பகுதியில் ஆர். ஏ. புரத்திலுள்ள எம்.ஜி.ஆர். ஜானகி மகளிர் கல்லூரியில் இந்த தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. இது முழுக்க 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான தடுப்பூசி முகாம். இந்த முகாமில் கோவிஷீல்ட் தடுப்பூசி மட்டுமே வழங்கப்படுகிறது. இங்கு தடுப்பூசி போட வருபவர்கள் தங்களுடைய அசல் ஆதார் அட்டையை கொண்டு வரவேண்டும். இவ்வளவு வசதிகள் ஏற்படுத்தி கொடுத்தாலும் இங்கு மதியம் வரை குறைந்த அளவே மக்கள் தடுப்பூசி போட வந்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.

Verified by ExactMetrics