மயிலாப்பூர் மின் மயானம் பழுது நீக்கப்பட்டு இரண்டு வார காலத்திற்குள் பயன்பாட்டிற்கு வரும். மாநகராட்சி அதிகாரி நம்பிக்கை

மயிலாப்பூர் மயானத்தில் உடல்களை எரியூட்டும் இடத்தில் உபகரணங்கள் உடைந்ததால் மயானம் மூடப்பட்டுள்ளது. என்று நாம் செய்தி வெளியிட்டிருந்தோம். இது சம்பந்தமாக மயிலாப்பூர் எம்.எல்.ஏ தா.வேலு அவர்கள் மாநகராட்சி அதிகாரியிடம் கேட்டபோது உபகரணங்கள் வாங்க அனுமதி அளித்துள்ளதாகவும், இன்னும் இரண்டு வார காலத்திற்குள் வேலை முடிந்து பயன்பாட்டிற்கு வரும் என்று அந்த அதிகாரி எம்.எல்.ஏவிடம் தெரிவித்துள்ளார். ஆனால் இந்த வேலையை இரண்டு வார காலத்திற்குள் முடிப்பது என்பது சந்தேகமே. இந்த மயானத்தை ஈஷா பவுண்டேஷன் நிர்வகித்து வருகிறது.