புத்தாண்டிற்காக காய்கறிகள், பழங்கள் மற்றும் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட அய்யப்பன் கோவில்.

எம்.ஆர்.சி நகரில் உள்ள ஸ்ரீ அய்யப்பன் கோயிலின் ஊழியர்கள் புதிய காய்கறிகள், பூக்கள், பழங்கள் மற்றும் தோரணங்களைப் பயன்படுத்தி கேரளர்கள், தமிழர்கள் கொண்டாடப்படும் புத்தாண்டு விழாவிற்க்காக கோவிலை அலங்காரம் செய்து வைத்திருந்தனர்.

இன்று காலை கோவிலுக்கு சுவாமி தரிசனத்திற்க்காக வந்த குடும்பங்களை ஒவ்வொரு சன்னதியிலிருந்தும் தொங்கும் காய்கறிகள் மற்றும் பூக்கள் அவர்களை வரவேற்கும் வண்ணம் அமைக்கப்பட்டிருந்தது.

கோவிலில் பழங்களையும் பூக்களையும் பிளாஸ்டிக்கில் போர்த்தி தொங்கவிட்டிருப்பதை சிலர் விமர்சனம் செய்கின்றனர். இந்த பழங்கள் மற்றும் பூக்களை அப்படியே கோவிலில் தொங்கவிட்டிருக்கலாம் என்றும் கூறுகின்றனர்.

அனைவரும் முகமூடி அணிந்து கோவிலுக்கு வந்திருந்தனர். ஆனால் சிலர் முகமூடிகளை வைத்திருந்தாலும் அவர்கள் அதை சரியாக அணியவில்லை.

அலங்கரிக்கப்பட்ட அய்யப்பன் கோவில் காணொளி: