மறுசீரமைப்பு செய்யப்பட்ட கல்விவாரு தெரு தற்போது வண்ண வண்ண ஓவியங்களால் மிளிர்கிறது.

முண்டகக்ண்ணி அம்மன் எம்.ஆர்.டிஎஸ். அருகே உள்ள கல்விவாரு தெருவில் கடந்த ஒரு வருடமாக சாலைகள் சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த சாலையில் கால்வாய் ஓரமாக தடுப்பு சுவரும், சாலையில் ஓரிடத்தில் சிறிய அளவிலான உடற்பயிற்சி கூடமும் அமைத்துள்ளனர். மேலும் குழந்தைகள் விளையாட பூங்காவும் அமைக்கப்பட்டுள்ளது.

இங்கு நேற்று சாலையோரம் உள்ள சுவற்றில் தன்னார்வ தொண்டு நிறுவனத்தை சேர்ந்த சுமார் இருபது நபர்கள் ஓவியங்களை வரைந்தனர். மயிலாப்பூர் எம்.எல்.ஏவும் நேற்று வந்து சாலை வேலைகளை பார்வையிட்டார். மேலும் இந்த ஓவியம் வரையும் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். இந்த வேலைகள் அனைத்தும் இன்னும் சில நாட்களில் நிறைவுறும்.

Verified by ExactMetrics