வெங்கடேச பெருமாள் கோவிலில் வழக்கம் போல் சிறப்பாக நடைபெற்ற கருட சேவை வாகனம்

மயிலாப்பூர் மாரி செட்டி தெருவில் உள்ள வெங்கடேச பெருமாள் கோவிலில் நேற்று பிரம்மோற்சவ விழாவின் கருட சேவை வாகனம் எப்பொழுதும் போல சிறப்பாக நடைபெற்றது. இதுவே பிரமோற்சவ விழாவில் பொதுமக்கள் பங்கேற்கும் கடைசி நிகழ்ச்சியாகும். ஏனென்றால் தற்போது அரசு கொரோனா தொற்றின் காரணமாக கோவில்களில் இரவு எட்டு மணிக்கு மேல் எவ்வித நிகழ்ச்சிகளையும் நடத்தக்கூடாது என்று உத்தரவு பிறப்பித்துள்ளது. எனவே இதற்கு பின் கோவில்களில் நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளும் கோவில் வளாகத்திற்குள்ளேயே நடைபெறும்.