மாடியில் காய்கறி தோட்டம் அமைப்பது குறித்த பயிலரங்கம்: மார்ச் 19ல்.

தமிழக அரசின் தோட்டக்கலைத் துறை, ஆர்.ஏ.புரம் சமூக அமைப்பான ராப்ரா (RAPRA) உடன் இணைந்து, மார்ச் 19 அன்று விற்பனை மற்றும் பயிற்சி பயிலரங்கை நடத்துகிறது.

இடம் – ஆர்.ஏ.புரம், 7வது மெயின் ரோட்டில், சென்னை மாநகராட்சி பூங்காவிற்கு எதிரே உள்ள இடம்.

நேரம் – காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை.

‘மொட்டை மாடியில் காய்கறித் தோட்டம்’ எப்படித் திட்டமிடுவது என்பதுதான் இந்தப் பயிற்சி வகுப்பில் முக்கியக் கவனம் செலுத்தப்படவுள்ளது.

இந்தத் திட்டத்தில் காய்கறி தோட்டக் கருவிகள், உரம், பூந்தொட்டிகள், காய்கறி மரக்கன்றுகள், தோட்டக் கருவிகள், பைகள் மற்றும் பிற விற்பனையும் நடைபெறவுள்ளது.

காய்கறி தோட்ட கருவிகள் கிட்டானது, அதன் விலையில் 50% தள்ளுபடி விலையில் (ரூ.450க்கு) விற்கப்படுகிறது.

இந்தப் பகுதியைச் சுற்றிலும் வசிக்கும் குடியிருப்பாளர்கள் மொட்டை மாடியில் காய்கறித் தோட்டம் அமைப்பதற்கு இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று ராப்ரா அமைப்பு கூறுகிறது.

மேலும் விவரங்களுக்கு 9840390903 / 9841047626 என்ற மொபைல் எண்களை தொடர்பு கொள்ளவும்.