பூங்காவில் யோகா, தியானம் மற்றும் இசை: ஜூன் 21 காலை

சர்வதேச யோகா மற்றும் இசை தினத்தை முன்னிட்டு ஜூன் 21 ஆம் தேதி காலை லஸ்ஸில் உள்ள நாகேஸ்வரராவ் பூங்காவில் யோகா, தியானம் மற்றும் இசை நிகழ்ச்சி ஆகியவை நடைபெறும்.

இந்த நிகழ்ச்சியை கர்நாடிகா மற்றும் பாரதிய வித்யா பவன் இணைந்து நடத்துகின்றன.

காலை 7 மணிக்கு தொடங்கி, யோகாசனம் நடக்கிறது. மேலும், சுதா ராஜா தலைமையிலான சர்கம் பாடகர் குழுவினர் இசை நிகழ்ச்சி நடத்த உள்ளனர். வயலின் கலைஞர் வி வி எஸ் முராரி இசை மற்றும் தியானம் நிகழிச்சியை வழங்குவார்.

இதில் அனைவரும் பங்கேற்கலாம்.

மாலை நிகழ்ச்சிகள், அனைத்து சிறு கச்சேரிகளும் கிழக்கு மாட தெருவில் உள்ள பாரதிய வித்யா பவனில் நடைபெறும்.