இன்று மயிலாப்பூர் தபால் நிலையத்தில் ஆதார் அட்டை சிறப்பு முகாம்.

இன்று சனிக்கிழமை காலை 8மணி முதல் மாலை 7மணி வரை சிறப்பு ஆதார் கார்டு முகாம் மயிலாப்பூர் கச்சேரி சாலையில் உள்ள தலைமை தபால் நிலையத்தில் நடைபெறுகிறது. இந்த முகாமில் புதியதாக ஆதார் கார்டுக்கு விண்ணப்பித்தல், பெயர் திருத்தம், முகவரி மாற்றம், திருத்தங்கள் மேற்கொள்ளுதல் போன்ற சேவைகள் வழங்கப்படுகிறது. பொதுமக்கள் இந்த சேவைகளை தகுந்த ஆவணங்களுடன் வந்து பெற்றுச் செல்லலாம். இன்று இதற்கென சிறப்பு கவுண்டர்கள் திறக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கும் இங்கு ஆதார் விண்ணப்பம் செய்யலாம். இதே போன்று நொச்சிக்குப்பத்தில் ஆதார் அட்டை சிறப்பு முகாம் நடைபெறுகிறது. அனைத்து தபால் நிலையங்களிலும் ஆதார் திருத்தங்களை மேற்கொள்ள சிறப்பு கவுண்டர் செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.  இந்த முகாமை தவறவிட்டவர்கள் வார நாட்களில் ஏதேனும் ஒரு தபால் நிலையத்தில் ஆதார் சம்பந்தமான விண்ணப்பங்களை அளிக்கலாம்.

Verified by ExactMetrics