மூத்தகுடிமக்கள் மாநகர பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்ய இலவச பயணச்சீட்டு வழங்கும் பணிகள் மீண்டும் தொடக்கம்.

சென்னை மாநகர போக்குவரத்து கழகம் மூத்த குடிமக்களுக்கு மாநகர பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்ய பயணச்சீட்டு வழங்கி வந்தனர். இந்த திட்டம் கொரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது மீண்டும் இலவசமாக பயணம் செய்ய பயணச்சீட்டுகளை மாநகர் முழுவதும் அனைத்து பேருந்து முனையங்களிலும் வழங்கி வருகின்றனர்.

அந்த வகையில் மயிலாப்பூர் பகுதியில் மந்தைவெளி பேருந்து முனையத்தில் இலவச பயணச்சீட்டு வழங்கி வருகின்றனர். அறுபது வயது நிரம்பியவர்கள் இலவச பயணச்சீட்டு பெற தகுதியானவர்கள். இந்த இலவச பயணச்சீட்டின் மூலம் மாநகர பேருந்துகளில் மாதத்திற்கு பத்து முறை பயணம் செய்யலாம்.

ஆறு மாதத்திற்கு மொத்தமாகவும் இந்த இலவச பயணச்சீட்டை பெற்றுக்கொள்ளலாம். இதற்கு அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும். அடையாள அட்டை இல்லாதவர்கள் பேருந்து முனையத்திலேயே விண்ணப்பம் செய்யலாம். இன்று முதல் நாள் என்பதால் கூட்டம் அதிகமாகவே காணப்பட்டது.

Verified by ExactMetrics