அமைதியான முறையில் சித்திரகுளத்தில் நடைபெற்று வரும் தெப்பத்திருவிழா.

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோவில் தெப்பத்திருவிழா கடந்த வியாழக்கிழமை 11ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இரண்டு நாட்களாக விழா அமைதியாக நடைபெற்றது. மக்கள் சித்திர குளத்தின் தெற்கு பகுதி வாயில்களின் வழியாக வந்து படிகளில் அமர்ந்து தெப்பவிழாவை கண்டுகளித்தனர். இன்று சனிக்கிழமை மூன்றாவது நாள் தெப்பத்திருவிழா நடைபெறவுள்ளது.

கோவிலில் தினமும் பெருமாளுக்கு பூஜைகளும் நடைபெற்றுவருகிறது. தெப்பவிழாவில் நாதஸ்வர கச்சேரிகளும் நடைபெற்றது. குளத்தில் தெப்பம்விட தற்போது போதுமான அளவு தண்ணீர் உள்ளது. மேலும் தெப்ப திருவிழாவிற்க்காக குளத்தின் நான்கு புறங்களிலும் வண்ண வண்ண விளக்குக்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இது பார்ப்போரை கவரும் வண்ணம் மிகவும் ரம்மியமாக உள்ளது.

Verified by ExactMetrics