நாற்பத்தைந்து வயதிற்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசி போடும் பணி அம்மா மினி கிளினிக்குகளிலும் தொடக்கம்

இன்று ஏப்ரல் 1 முதல் கொரோனா தடுப்பூசி நாற்பத்தைந்து வயது மற்றும் அதற்கு மேற்பட்டோருக்கும் மூத்த குடிமக்களுக்கும் போடத் தொடங்கியுள்ளனர். இப்போது தடுப்பூசி ஆரம்ப சுகாதார நிலையங்கள் மட்டுமின்றி அம்மா கிளினிக்கிலும் போட தொடங்கியுள்ளனர். இன்று ஆழ்வார்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் புதியதாக மந்தைவெளி தெரு, மந்தைவெளி மார்க்கெட் அருகே திறக்கப்பட்டுள்ள அம்மா கிளினிக்கிலும் தடுப்பூசி போட மக்கள் வந்திருந்தனர். தடுப்பூசி போடுவதற்கு ஆதார் அட்டை அல்லது வாக்காளர் அடையாள அட்டை கொண்டு வந்து பதிவு செய்து தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.

Verified by ExactMetrics