தேர்தல் 2021: குப்பம் பகுதிகளில் வசிக்கும் மக்களின் ஆதரவு திமுகவிற்கு உள்ளதாக வேட்பாளர் த.வேலு தெரிவிக்கிறார்.

மயிலாப்பூர் தொகுதியில் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே பெரும் போட்டி நிலவுகிறது. இது தவிர மக்கள் நீதி மய்யம் மற்றும் நாம் தமிழர் கட்சியும் களத்தில் உள்ளது. திமுக வேட்பாளர் த.வேலு நேற்று இரவு தேர்தல் பிரச்சாரம் முடிந்தவுடன், குப்பம் பகுதிகளிலும் மற்றும் குடிசை மாற்று வாரிய பகுதிகளிலும் அவர் எதிர்பார்த்ததை விட அதிகளவு மக்கள் ஆதரவு திமுகவிற்கு உள்ளதாக தெரிவித்துள்ளார். இவர் தற்போது இரண்டாவது சுற்று தேர்தல் பிரச்சாரத்தை முடித்துள்ளார். இவர் ஏற்கனெவே சென்னை கவுன்சிலராக இருந்த போது கேசவப்பெருமாள்புரம், ஸ்ரீனிவாசபுரத்தில் செய்த வேலைகளை மக்கள் நினைத்து ஆதரவளிப்பர் என்று நம்பிக்கை இருப்பதாக கூறுகிறார். இன்று மாலை எட்டு மணியளவில் திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் அம்பேத்கார் பாலம் அருகே தேர்தல் பிரச்சாரம் செய்ய வரவிருப்பதாக வேலு அவர்கள் நமக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். அதற்கு பின் வேலு மீண்டும் ஒரு இரண்டு சுற்று தேர்தல் பிரச்சாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Verified by ExactMetrics