சில சபாக்கள் மாதாந்திர கச்சேரிகளை, வழக்கம் போல சபாக்களில் அமர்ந்து ரசிக்க ஏற்பாடு செய்துள்ளது.

மயிலாப்பூர் பகுதிகளில் உள்ள சபாக்களில் இதுநாள் வரை கச்சேரிகள் மற்றும் நாடகங்கள் நடத்துவது சம்பந்தமாக எவ்வித தகவலும் இல்லை. சிலர் மட்டுமே கச்சேரிகளை ஆன்லைனில் நடத்திவந்தனர். ஆனால் இன்றைய நாளிதழில் ஆழ்வார்பேட்டை நாரத கான சபாவும் மற்றும் மயிலாப்பூர் ஆர். ஆர். சபாவும் தங்களுடைய மாதாந்திர கச்சேரி நிகழ்ச்சிகள் விவரங்களை வெளியிட்டுள்ளனர். இதில் சபாக்களில் நேரிடையாக சில கச்சேரிகள் இருக்கும் என்றும் அதே நேரத்தில் மக்கள் கொரோனா விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர். இந்த சீசனில் கச்சேரிகள் சபாக்களில் குறைவாகவே நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Verified by ExactMetrics