புனித நாளில் சேவையாற்றும் சில தேவாலயங்கள்

இந்த வாரம் பேராலயங்களில் புனித வாரம் கொண்டாடப்படுகிறது. ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாள் புனித வெள்ளி. இன்று புனித வெள்ளி அனுஷ்டிக்கப்படுகிறது. நேற்று வியாழக்கிழமை நிறைய பேராலயங்களில் சிறப்பு பிரார்த்தனை திறந்த வெளியிலும் சில பேராலயங்களில் தேவாலயத்தின் உள்ளேயும் நடைபெற்றது. நேற்றைய தினம் ‘மாண்டி வியாழன்’ கொண்டாடப்பட்டது. நாளைய மறுநாள் அனைத்து பேராலயங்களிலும் ஈஸ்டர் சண்டே தினம் கொண்டாடப்படவுள்ளது. இந்த மாதம் பேராலய பாதிரியார்கள் கிறிஸ்தவ மக்களை தொண்டு செய்யுமாறு அறிவுறுத்துவர். அந்த வகையில் நேற்று ஆர்.ஏ.புரத்தில் உள்ள மாதா பேராலயத்தில், மக்கள் கடந்த நாற்பது நாட்களாக தொண்டு செய்வதற்காக வீட்டில் தினமும் குறைந்தளவு சேமிக்கப்பட்ட அரிசி, சர்க்கரை போன்ற உணவு பொருட்களை பேராலயத்தில் கொண்டு வந்து தொண்டு செய்வதற்காக பாதிரியர்களிடம் வழங்கினர். இந்த உணவு பொருட்கள் பேக்கிங் செய்யப்பட்டு ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்படும்.

 

Verified by ExactMetrics