தேர்தல் 2021: மயிலாப்பூரில் திமுக தலைவர் மு.க ஸ்டாலினின் தேர்தல் பிரச்சாரம்

திமுக தலைவர் மு.க ஸ்டாலின் நேற்றிரவு சுமார் எட்டு மணியளவில் மயிலாப்பூர் தொகுதியில் அம்பேத்கார் பாலம் அருகே திமுக வேட்பாளர் த. வேலுவுக்கு வாக்கு சேகரித்தார். திமுக தலைவர் வருவதற்கு முன்பே அங்கு திரளாக மக்கள் கூடியிருந்தனர். இந்த தேர்தல் பிரச்சார நிகழ்ச்சி ஆடல், பாடல் என கலைகட்டியிருந்தது. தலைவர் ஸ்டாலின் வேனில் இருந்தபடியே வாக்கு சேகரித்தார். தேர்தல் பிரச்சார மேடையில் திமுக வேட்பாளர் த. வேலுவை தவிர, மயிலாப்பூர் அருகிலுள்ள மற்ற தொகுதி திமுக வேட்பாளர்களும் கலந்து கொண்டனர். சில நாட்களுக்கு முன்பு மாட வீதியில் அதிமுக வேட்பாளர் ஆர்.நடராஜுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாக்கு சேகரித்தார்.

Verified by ExactMetrics