மயிலாப்பூரில் பல மாதங்களுக்கு பிறகு அங்கன்வாடி பள்ளிகள் மீண்டும் திறப்பு

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பையடுத்து அங்கன்வாடி பள்ளிகளும் தற்போது திறக்கப்பட்டுள்ளது. மயிலாப்பூர் முண்டகக்கண்ணி அம்மன் கோவில் பகுதியில் மூன்று அங்கன்வாடி பள்ளிகள் உள்ளது. இங்கு செப்டம்பர் 2ம் தேதி அங்கன்வாடி குழந்தைகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு மதிய உணவு வழங்கப்பட்டது. பாடங்களும் நடத்தப்பட்டது.

ஒவ்வொரு அங்கன்வாடி பள்ளியிலும் பதினைந்து குழ்நதைகளுக்கு மட்டுமே வருவதற்கு தற்போது தமிழக அரசால் அனுமதிவழங்கப்பட்டுள்ளது. அங்கன்வாடி பள்ளியில் இரண்டு வயது முதல் ஐந்து வயதுடைய குழந்தைகள் மட்டுமே சேர்க்கப்படுவர். சாதாரண நாட்களில் இந்த அங்கன்வாடி பள்ளிகள் காலை ஒன்பது மணி முதல் நான்கு மணி வரை செயல்படும்.

கொரோனா காலங்களில் இந்த அங்கன்வாடி பள்ளிகள் அனைத்து பகுதிகளிலும் மூடப்பட்டது. மேலும் தமிழக அரசு உத்தரவுப்படி இங்கு பயின்று வந்த குழந்தைகளுக்கு அவர்கள் வீட்டிற்கே சென்று பெற்றோர்களிடம் உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டது.

Verified by ExactMetrics