பள்ளிகள் திறந்த முதல் நாளில் பள்ளி வளாகத்தில் மரம் நட்ட மாணவர்கள்

ஆர்.ஏ .புரம் மந்தைவெளி எம்.ஆர்.டி.எஸ் எதிரே உள்ள சென்னை உயர்நிலைப்பள்ளி செப்டம்பர் 1ம் தேதி ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி திறக்கப்பட்டது. பள்ளி திறந்த முதல் நாள் பள்ளியின் முதல்வர் பால்ராஜ் மாணவர்களிடையே எழுச்சியையும் தன்னம்பிக்கையும் உருவாக்க பள்ளிக்கு வந்த அனைத்து மாணவர்களிடையேயும் ஒவ்வொரு மரக்கன்றுகள் கொடுத்து பள்ளி வளாகத்தில் நட வைத்தார். மேலும் மாணவர்களிடையே சுற்றுசூழல் சம்பந்தமாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும், என்று பள்ளியின் முதல்வர் தெரிவித்தார்.

Verified by ExactMetrics