மயிலாப்பூர் சபாக்களில் கச்சேரிகள் மெதுவாக நடைபெறத்தொடங்கியுள்ளது.

மயிலாப்பூர் பகுதியில் ஆங்காங்கே சபா அரங்குகளில் கச்சேரிகள் மெதுவாக நடைபெறத் தொடங்கியுள்ளது. சனிக்கிழமை மயிலாப்பூர் பைன் ஆர்ட்ஸ் கிளப்பில் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் அவர்களின் நினைவாக இசை கச்சேரி நடைபெற்றது. இது ஒரு தனியார் நிகழ்ச்சியாகும். சபா அரங்கில் ஒரு இருக்கை விட்டு ஒரு ஒரு இருக்கையில் ரசிகர்கள் அமரவைக்கப்பட்டனர்.