பருவ மழையை எதிர்கொள்ளும் வகையில் மாநகராட்சி ஊழியர்கள் வடிகால்களை சுத்தம் செய்யும் பணிகளில் தீவிரம்

சாலைகளில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்காமல் இருக்க கடந்த இரண்டு வாரங்களாக சென்னை மாநகராட்சியின் ஊழியர்கள் மழை நீர் வடிகால்களை தூர் வாரி வருகின்றனர். கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரி மற்றும் ரங்கா ரோடு அருகே மாநகராட்சி ஊழியர்கள் இந்த பணியை மேற்கொண்டு வந்ததை பார்க்க முடிந்தது.

இது போன்று உங்கள் பகுதிகளிலும் மழை நீர் வடிகால்களை சுத்தம் செய்ய வேண்டுமென்றால் உள்ளூர் மாநகராட்சி அலுவலகத்தை அணுகவும்.