மயிலாப்பூர் வடக்கு மாட வீதியில் கொலு பொம்மைகளின் விற்பனை தொடங்கியது

நவராத்திரி விழாவுக்காக மயிலாப்பூர் வடக்கு மாட வீதியில் கொலு பொம்மைகள் விற்பனை தொடங்கியுள்ளது. சுமார் இருபது கடைகளில் பொம்மைகள் விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த வருடம் கொரோனா காரணமாக பொம்மைகள் விற்பனை குறைந்தே காணப்பட்டதென்றும் இந்த வருடம் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் விற்பனை ஓரளவு நடைபெறும் என்று எதிர்பார்ப்பதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

கடந்த வருடம் விற்காமல் இருந்த பழைய பொம்மைகளும் ஓரளவு குறைந்த விலையில் விற்கப்படும் என்றும், அதே நேரத்தில் தற்போது தொழிலாளர்கள் பற்றாக்குறை இருப்பதால் இந்த வருடம் புதிய பொம்மைகளின் வருகை குறைவாகவே உள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.