தி.நகர், எழும்பூருக்கு பேருந்து சேவைகள்: எம்.டி.சி.யிடம் எம்.எல்.ஏ மனு

எம்.எல்.ஏ தா.வேலு மயிலாப்பூர் மக்களின் வேண்டுகோளுக்கிணங்க சென்னை மாநகர போக்குவரத்து கழகத்திற்கு முக்கிய வேண்டுகோளை மனுவாக கொடுத்துள்ளார்.
மயிலாப்பூர் மற்றும் மந்தைவெளியிலிருந்து தி.நகர் மற்றும் எழும்பூருக்கு பேருந்து வசதி இல்லையென்றும் ஆகவே இந்த வழித்தடத்தில் பேருந்து சேவையளிக்க வேண்டும் என்று மனுவில் தெரிவித்துள்ளதாக எம்.எல்.ஏ தா.வேலு தெரிவித்துள்ளார்.