மயிலாப்பூரின் உள் பகுதிகளில் உள்ள சிறிய கோயில்களில், மக்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

கொரோனா தொற்றால் கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள் ஆகியவை மூடப்பட்டுள்ளது. ஆனால் மயிலாப்பூரில் பழமையான உள் பகுதிகளில் உள்ள சிறிய கோவில்கள் மூடப்பட்டிருந்தாலும் மக்கள் வந்து பிரார்த்தனை செய்கின்றனர். எடுத்துக்காட்டாக பஜார் சாலையில் ஒரு முனையில் உள்ள தில்லை விநாயகர் கோவிலில் கடந்த வெள்ளிக்கிழமை மக்கள் பிரார்த்தனை செய்ததை காண முடிந்தது. அதேபோல அருண்டேல் தெருவில் உள்ள வலம்புரி விநாயகர் கோவிலில் பூசாரி பூஜை செய்ததை காண முடிந்தது. சில இடங்களில் பிரசாதமும் வழங்குவதை காண முடிந்தது. இது போன்று உள்ள சிறிய கோவில்களில் மக்கள் நேரம் இருக்கும்போது சென்று பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

Verified by ExactMetrics